7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 19 மார்ச், 2020

முல்லைத்தீவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சோதனைச் சாவடிகள்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளுக்கு நாள் இராணுவ சோதனைச் சாவடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் மூன்று இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் ஒரு சோதனைச் சாவடியும், கருவேலங்கண்டல் பகுதியில் ஒரு சோதனைச் சாவடி மற்றும் முள்ளியவளை தேக்கங்காடு பகுதியில் மற்றும் ஒரு சோதனைச் சாவடியுமாக மூன்று சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கருவேலன் கண்டல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி வீதியூடாக பயணிக்கின்ற பயணிகளின் பெயர், முகவரி ,அடையாள அட்டை இலக்கம் ,தொலைபேசி இலக்கம், என்பன பதியப்பட்டு பயணிப்பவர்களிடமிருந்து கையொப்பம் பெறும் நடவடிக்கையையும் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது அதேபோன்று முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மந்துவில் மற்றும் விசுவமடு பகுதிகளிலும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் பகுதியில் என நாளுக்கு நாள் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்ற அதேவேளை முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி புளியங்குளம் வீதி போன்றவற்றிலும் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்