7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 9 மார்ச், 2020

பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் ஸ்ரீலங்காவின் இராணுவ உயர் அதிகாரிகள்?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சில ஸ்ரீலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றை மேற்கோள்காட்டி தமிழ் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்க பிரித்தானியா நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என, பிரதிநிதிகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்த, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர், நைஜெல் அடம்ஸ்,
“தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.
பிரித்தானிய தன்னாட்சி உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிகளை நிறுவும் தனது எண்ணத்தை பிரித்தானியா வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டாம் நிலை சட்டம் இயற்றப்பட்டவுடன் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்.
விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சாத்தியமான பெயர்கள் குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது” என்று இணை அமைச்சர், நைஜெல் அடம்ஸ், தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்