கொரோனா வைரஸ் குறித்த ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலை இத்தாலியை ஒத்ததாக பயணிப்பதாக அரச மருத்துவ
அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளியால் கொழும்பில் பலருக்கு கொரோன தொற்றியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலை தொடர்பில் அரச வைத்திய சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறுகையில்,
கொரோனாவைப் பெறுத்த வரையில் முன்னாயத்த நடவடிக்கை கூட தோல்வியில் தான் முடிகின்றது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உறுதியான காரணம் தெரியவராத நிலையில் இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
நாளை என்ன நடக்கும் என்று தெரியாது, தினமும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
தற்போது சாதாரண அறிகுறிகளுடன் நோய் தொற்றுகின்றது. இது பாரிய சவாலாக மாறியுள்ளது.
ஒரு நோயாளர் முழு நாட்டையும் நாசமாக்க முடியும். இதன் மூலம் நோயாளர்களை குறை கூறவில்லை. ஆனால் ஒரு நோயாளரையும் விட்டுவிக்க கூடாது.
இத்தாலியின் வரைபை ஒத்த வகையில் இன்று இலங்கையின் வரைபு காணப்படுகின்றது. இதை சாதாரணமாக நினைத்தால் நிலைமை இன்னும் மோசமடையலாம்.
மே மாதம் முதல் வாரம் வரை அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

