7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 23 ஏப்ரல், 2020

கணவனுக்கு கொரொனா என லீசிங் ஊழியர்களை ஓடவிட்ட பெண்

கட்டுப்பணம் செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்றதால் கணவனுக்கு கொரோனா என பொய் சொன்ன பெண் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ்.நல்லுார் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. மாதாந்த கட்டுப்ப ணத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட பொருள் ஒன்றுக்கான கட்டுப்பணத்தை செலு த்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பணம் இல்லாமையால் தனது கணவனுக்கு கொரோனா என வீட்டிலி ருந்த பெண் பொய் கூறியுள்ளார். இதனையடுத்து அச்சமடைந்த நிதி நிறுவன ஊழி யர்கள் உடனடியாக விடயத்தை சுகாதார பிரிவுக்கு கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிரடியாக வீட்டை முற்றுகையிட்ட சுகாதார பிரிவினர் அங்கு பரிசோதித்தபோது குறித்த பெண் கட்டுப்பணம் செலுத்த பணம் இல்லாமையால் பொய் கூறியமை அம்பலமாகியிருக்கின்றது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்