7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

புலம்பெயர்ந்த மருத்துவர்களின் உதவியை நாடும் ஜேர்மன்

கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு புலம்பெயர்ந்த மருத்துவர்களின் உதவியை ஜேர்மன் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாடியுள்ளனர்.
ஜேர்மனியில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் அல்லது தனிமைப்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதையடுத்து மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையும் அதிகரித்து வருகின்றது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க படுக்கைகள் முதலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், மருத்துவ ஊழியர்கள், பரிசோதனைகள், நோயாளிகளுடன்

தொடர்பிலிருந்தோரைக் கண்டுபிடித்தல் ஆகிய விடயங்களில் இன்னும் தேவை இருந்த வண்ணம் உள்ளது.
அங்கு சுமார் 2,300 மருத்துவர்கள், நோய்வாய்ப்பட்டு அல்லது தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆகவே, கொரோனாவை சமாளிப்பதற்கு, ஜேர்மன் சுகாதாரத்துறை அதிகாரிகள் புலம்பெயர்ந்த மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்