உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அந்தந்த நாடுகளில் வாழும் புலம் பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய 16 வெளிநாட்டு தூதரகங்களின் நலன்புரி பிரிவுகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைவர் கமல் ரத்வத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது 16 வெளிநாட்டு தூதரகங்களின் தொழிலாளர் நலன்புரி பிரிவுகள், தொழிலாளர் நலன்புரி நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது