கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் இன்றைய தினம்
மீண்டும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கந்தரோடை, ஐயனார் கோவிலடி, அளவெட்டி, சண்டிலிப்பாய், கல்லாரை ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு ஒரு கிழமைக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பொருட்களை சுன்னகம் ஐயனார் ஒன்றியம் பிரான்ஸ் ஊடக அமரர் கலாதேவி ஞாபகார்த்தமாகவும் பிரித்தானியாவில் வசிக்கும் செல்வி. ஆர்த்தி சுதன் சுவிஸ் திருமதி விஜி கைலைநாதன் ஆகியோரின் அன்பளிப்புக்கள் ஊடக வழங்கி வைக்கப்பட்டன.

