7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 2 ஏப்ரல், 2018

கட்டுநாயக்க விமானநிலையத்தில் விமானத்தை தடுத்த பறவை

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மத்தள ஊடாக டுபாய் செல்லவிருந்த விமானத்தின் இடது பக்கம் பறவை  ஒன்று மோதியுள்ளது.
 
FZ 551 ரக விமானமான பிளை டுபாய் விமானத்திலேயே இவ்வாறு பறவை மோதியுள்ளது.
 
இதனால் குறித்த விமானம் மத்தள விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 113 பயணிகளுடன் மத்தளைக்கு சென்ற விமானம் அங்கிருந்த 55 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு டுபாய்க்கு செல்ல தயாராகவிருந்தது.
 
எனினும், குருவி மோதியதால், காலை 7.11 இலிருந்து விமானம் மத்தளை விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
டுபாய் செல்வதற்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானத்தில் ஏறிய 113 பயணிகளும், மத்தளை விமானநிலையத்தில் இருந்த 55 பயணிகளும் தொடர்ந்து மத்தளை விமானநிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்