7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 2 ஏப்ரல், 2018

இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தாய் - மகள் பருத்தித்துறையில் பதற்றம்

யாழ் - பருத்தித்துறை பிரதேச வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் அடிகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டமையினால் பதற்றம் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
 
படுகாயமடைந்த மகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். 
 
இந்த நிலையில் தாயார் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவம் பருத்தித்துறை அம்பன் பகுதியில் சற்றுமுன்னர் நடந்தது. 
 
உயிரிழந்த மகளுக்கு 58 வயது எனக் கூறப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. 
 
இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்